/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேசபக்தி பாடல்களை பாடி அசத்திய ராணுவ வீரர்கள்
/
தேசபக்தி பாடல்களை பாடி அசத்திய ராணுவ வீரர்கள்
ADDED : ஆக 17, 2024 12:56 AM

குன்னுார்;குன்னுார் வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராணுவ பேண்ட் இசை குழுவினர், தேச பக்தி பாடல்களை இசைத்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, விளக்கொளியில் ஜொலித்த வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் இரவு, நாயக் ரவி தலைமையில் நடந்த ராணுவ பேண்ட் வாத்திய இசை குழுவினரின் தேசப்பற்று இசை நிகழ்ச்சி நடந்தது. அதில், ராணுவ வீரர்கள் தமிழ், மலையாளம், ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளிலும் தேசப்பற்று பாடல்களை இசையுடன் பாடினர்.
பாரம்பரிய உடை அணிந்த ராணுவ வீரர்கள், 'டிரம்பட், கிளாரினெட்,டிரம்ஸ், டிரம் போன், கீ போர்டு, புளூட்' உட்பட பல்வேறு இசை கருவிகளால் தேசப்பற்று பாடல்களை இசைத்தது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும், ராணுவ வீரர்கள் சுனில், பிஜு, வைஷ்ணவி உட்பட பலர் தேசப்பற்று பாடல்களை பாடினர்.
குறிப்பாக, சுபேதார் சுனில் பாடிய, 'மா துஜே சலாம், வந்தே மாதரம், ஜெய் ஹோ' உள்ளிட்ட பாடல்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.