/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை வெயிலின் தாக்கம் 'ஓ.ஆர்.எஸ்.,' கரைசல் வழங்க ஏற்பாடு
/
கோடை வெயிலின் தாக்கம் 'ஓ.ஆர்.எஸ்.,' கரைசல் வழங்க ஏற்பாடு
கோடை வெயிலின் தாக்கம் 'ஓ.ஆர்.எஸ்.,' கரைசல் வழங்க ஏற்பாடு
கோடை வெயிலின் தாக்கம் 'ஓ.ஆர்.எஸ்.,' கரைசல் வழங்க ஏற்பாடு
ADDED : மே 01, 2024 12:35 AM

பந்தலுார்:பந்தலுார் பகுதியில் பல பகுதிகளில் 'ஓரஸ்' கரைசல் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
தமிழக முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், குளிர்ச்சியான மாவட்டமாக கருதப்பட்ட நீலகிரியிலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க பல்வேறு துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், சுகாதாரத்துறை சார்பில் மக்கள் அதிகம்கூடும் இடங்களில், 'ஓ.ஆர்.எஸ்.,' எனப்படும் கரைசல் மற்றும் கரைசல் காண பவுடர் வழங்கப்படும் பணி துவக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பந்தலுாரில் நடந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமை வகித்தார். வெயிலால் வரும் மயக்கம், உடல் சோர்விலிலிருந்து பாதுகாத்து கொள்ள ஓரஸ் பவுடர் கரைசல் பயன்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பந்தலுார், சேரம்பாடி, எருமாடு உள்ளிட்ட எட்டு இடங்களில் இந்த பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பந்தலுார் சுகாதார ஆய்வாளர் கவுரிசங்கர், செவிலியர் வனிதா மற்றும் ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர்.
எருமாடு பகுதியில், சுகாதார ஆய்வாளர் கனையேந்திரன், சேரங்கோடு ஊராட்சி மன்ற துணை தலைவர் சந்திரபோஸ், வி.ஏ.ஓ., யுவராஜ் மற்றும் வியாபாரிகள் சங்கம், ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.