/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
85 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு
/
85 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு
85 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு
85 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு
ADDED : ஏப் 04, 2024 11:01 PM

குன்னுார்;குன்னுாரில் இன்று முதல், 10ம் தேதி வரை, 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டு பெரும் பணி நடக்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில், 85 வயதை கடந்த முதியோர்கள் சிரமமின்றி ஓட்டு செலுத்த தபால் ஓட்டு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக, நேற்று குன்னுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த ஆர்.டி.ஓ., சதீஷ் பேசுகையில், ''குன்னுார் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், 85 வயது கடந்த, 574 பேரின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டுக்கள் படிவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, 8 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 5ம் தேதியில் இருந்து, 10ம் தேதி வரை இந்த குழுவினருடன் கட்சியின் ஏஜென்ட்களும் உடன் செல்வர். ஓட்டுக்கான விண்ணப்பம் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால், 85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டுகள் அளிப்பதால் ஓட்டு சதவீதம் குறைவது தடுக்கப்படும்,'' என்றார்.
கூட்டத்தில், குன்னுார் கோத்தகிரி தாசில்தார்கள், பா.ஜ., -காங்.,- தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

