/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்ட தொழிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் 20ல் துவங்கும் உபாசி மாநாட்டில் விவாதிக்க திட்டம்

ADDED : செப் 17, 2024 05:24 AM
குன்னுார்: குன்னுாரில், 20ம் தேதி துவங்கும் தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின் (உபாசி) 131வது மாநாட்டில், தோட்ட தொழிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
குன்னுாரில் உள்ள தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கத்தின், 131வது மாநாடு வரும், 20, 21ம் தேதிகளில் நடக்கிறது. மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, தோட்ட தொழிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், தேயிலை, காபி, ரப்பர் மற்றும் வாசனை திரவியங்கள் உற்பத்தி குறித்த தொழில்நுட்ப அமர்வு மற்றும் குழு விவாதங்கள் நடக்கின்றன.
தேயிலையில் பூச்சி தாக்குதல்களை கண்டறிவதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப அடிப்படையிலான தீர்வு, தென் மாநிலங்களில் பட்டர் புரூட் நடவுக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் உள்ளிட்டவை குறித்தும் தெரிவிக்கப்பட உள்ளது.
21ம் தேதி நடக்கும் முக்கிய நிகழ்வில், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகசெயலர் சுனில் பார்த்வால், கூடுதல் செயலர் சத்யா ஸ்ரீனிவாஸ் பங்கேற்று, 19வது கோல்டன் லீப் விருதுகளை வழங்கி பேசுகின்றனர். தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இரண்டு நாட்களும் தொழில் கண்காட்சி இடம் பெறுகிறது. இத்தகவலை உபாசி தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.