/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 113 பயனாளிகளுக்கு உதவிகள்
/
மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 113 பயனாளிகளுக்கு உதவிகள்
மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 113 பயனாளிகளுக்கு உதவிகள்
மேட்டுப்பாளையம் ஜமாபந்தியில் 113 பயனாளிகளுக்கு உதவிகள்
ADDED : ஜூன் 26, 2024 10:00 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் நடந்த ஜமாபந்தியில், 113 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள், இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை வழங்கப்பட்டன.
மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், ஜமாபந்தி நான்கு நாட்கள் நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, துவக்கி வைத்தார். நான்கு நாட்களில் மொத்தம்,2,535 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்தனர். இதில், இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமை தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், தொகுப்பு வீடுகள், சாலை வசதிகள், சாக்கடை வசதிகள் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அதிகளவில் கொடுத்து இருந்தனர்.
மனுக்களை பரிசீலனை செய்து, 37 நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 58 பேருக்கு ரேஷன் கார்டு, ஆறு பேருக்கு நத்தம் பட்டா மாறுதல், ஐந்து பேருக்கு பட்டா மாறுதல், ஐந்து பேருக்கு முதல் பட்டதாரி சான்று, தலா ஒருவருக்கு வாரிசு மற்றும் இறப்பு சான்றிதழ் என மொத்தம்,113 பயனாளிகளுக்கு, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உதவிகளை வழங்கினார். ஜமாபந்தியில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், தலைமையிட துணை தாசில்தார் செல்வராஜ், தனி தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.