/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒரசோலை அரசு நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு உதவி
/
ஒரசோலை அரசு நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு உதவி
ADDED : செப் 17, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, லயன்ஸ் கிளப் சார்பில், 'டிராக் சூட்' வழங்கப்பட்டது.
கோத்தகிரி லயன்ஸ் கிளப் நிர்வாகி ராமச்சந்திர ரெட்டி தலைமை வகித்தார். கவர்னர் நித்தியானந்தம், 42 மாணவர்களுக்கு, 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 'டிராக் சூட்' வழங்கினார்.
மேலும், பள்ளி வளாகத்தில் இயங்கும் பகல் நேர பாதுகாப்பு மைய குழந்தைகளுக்கு, கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார் ஸ்வெட்டர் வழங்கினார். லயன்ஸ் கிளப் மூத்த தலைவர் போஜராஜன், நிர்வாகி ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர் கணேஷ், பேரூராட்சி கவுன்சிலர் சகுந்தலா காளிதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.