/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்
/
நீலகிரி கல்லுாரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்
ADDED : மார் 22, 2024 08:40 PM
நீலகிரி கல்லுாரிக்கு, இந்தியாவிலேயே அதிக மதிப்பெண்ணாக, நாக் ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரத்துடன், தன்னாட்சி அந்தஸ்தை பல்கலை மானியக்குழு வழங்கியுள்ளது.
பாரதியார் பல்கலை அங்கீகாரம் பெற்ற இக்கல்லுாரி, கல்வியில் புதுமையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த 2012ல் செயல்படத் தொடங்கிய இக்கல்லுாரி, கூடுதல் பாடங்களுடன், புதுமையான திட்டங்களை செயல்படுத்திய கல்லுாரியாக, தேசியளவில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ளது.
நீலகிரி கல்லுாரி, கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலை தரவரிசையிலும், கல்வி வளர்ச்சியிலும் தொடர்ந்து சிறந்து விளங்கி வருகிறது. கல்லுாரியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ரஷீத் கஸ்ஸாலி, ஹேப்பி கேம்பஸ், ஸ்கில் பேங்க், ஸ்போர்ட்ஸ் அகாடமி, மகிழ்ச்சி மதிய உணவு பிரசாரம், இயற்கை விவசாயம், கோவிட்க்கு பிந்தைய நிலையான கிராமத்திட்டம் ஆகியவற்றின் மூலம் கல்லுாரியை முன்னிலைப்படுத்த, பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
நீலகிரியில் உள்ள பள்ளிகளின் கல்வியை மேம்படுத்தும் வகையில், மாவட்ட கல்விக்குழுவுடன் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நடத்தி வருகிறது.
அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து, கிராமத்தில் உயர்கல்வி வளர வேண்டும் என்ற நோக்கில், மலையக கிராமக் குழந்தைகள், நவீன தொழில்நுட்பத்துடன் படிக்கும் வாய்ப்பை நீலகிரி கல்லுாரி உறுதி செய்கிறது.

