/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுகாதாரத்தை பாதுகாப்பதில் கவனம்; அவசியம் உலக சுகாதார தினத்தில் விழிப்புணர்வு
/
சுகாதாரத்தை பாதுகாப்பதில் கவனம்; அவசியம் உலக சுகாதார தினத்தில் விழிப்புணர்வு
சுகாதாரத்தை பாதுகாப்பதில் கவனம்; அவசியம் உலக சுகாதார தினத்தில் விழிப்புணர்வு
சுகாதாரத்தை பாதுகாப்பதில் கவனம்; அவசியம் உலக சுகாதார தினத்தில் விழிப்புணர்வு
ADDED : ஏப் 08, 2024 11:36 PM

பந்தலுார்;'பெண்கள் சுகாதாரத்தை பாதுகாப்பதில் கவனம் கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
பந்தலுார் அருகே உப்பட்டி தையல் பயிற்சி மையத்தில், சுகாதார துறை. 'ஆல் தி சில்ட்ரன்' மற்றும் கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், உலக சுகாதார தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
தையல் பயிற்சி ஆசிரியை சுலோச்சனா வரவேற்றார். சுற்றுச்சூழல் மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், ''பெண்கள் உணவு முறையாக பின்பற்றினாலே, பெரும்பாலான நோய்கள் வராமல் தடுக்க முடியும். உடல்நலம் பாதிக்கப்பட்டால், மருத்துவரை அணுகி உரிய ஆலோசனையுடன் மருந்து உட்கொள்வது அவசியம்,'' என்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பேசியதாவது:
பெண்கள் தேவையற்ற மன குழப்பங்களை தவிர்க்க வேண்டும். டென்ஷனை குறைத்து அவ்வப்போது, மருத்துவரை அணுகி உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் ஏதேனும் நோய் இருந்தால் ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சை அளித்து உரிய பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும். அதேபோல் உணவு பழக்கங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்து கொள்வதும் அவசியமாகும்.
கொசுக்களால் பல்வேறு நோய்கள் பரவி வரும் நிலையில், உடல் சுத்தத்துடன் சுற்றுப்புறமும் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், பலவித தொற்று நோய்களை தடுக்க முடியும். அதேபோல் புற்று நோய்கள் பெண்களுக்கு பல வகையிலும் ஏற்படும் நிலையில், அதனை அரசு இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கிறது.
எனவே, பெண்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பரிசோதனை செய்து கொள்ள முன் வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொறுப்பாளர் நாராயணன் நன்றி கூறினார்.

