/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை வெயிலில் பாதுகாப்பு: பழங்குடியினருக்கு விழிப்புணர்வு
/
கோடை வெயிலில் பாதுகாப்பு: பழங்குடியினருக்கு விழிப்புணர்வு
கோடை வெயிலில் பாதுகாப்பு: பழங்குடியினருக்கு விழிப்புணர்வு
கோடை வெயிலில் பாதுகாப்பு: பழங்குடியினருக்கு விழிப்புணர்வு
ADDED : மே 02, 2024 11:52 PM

பந்தலுார்:நீலகிரியில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுகாதாரத் துறை சார்பில், வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்புவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதில், பந்தலுார் அருகே சேரம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பழங்குடியின கிராமங்களில், நேரடியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போத்துக்கொல்லி பழங்குடியின கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் டாக்டர் ஸ்ரீநிதி மற்றும் சுகாதார ஆய்வாளர் கனயேந்திரன் ஆகியோர், பழங்குடியின மக்களிடம் பேசுகையில், ''தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், சாதாரண நாட்களை போல் குழந்தைகளை வெளியில் விளையாட விடுவதை தவிர்த்து, நிழல் மற்றும் வீடுகளுக்குள் வைத்திருக்க வேண்டும். பழைய மற்றும் சூடான உணவு பொருட்களை தவிர்த்து, ஓரளவு குளிர்ச்சியான உணவுப் பொருட்களை உட்கொள்வது அவசியம்.
''வெப்பம் காரணமாக உடலில் ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி போதிய ஆலோசனை பெறவும் மருத்துவ சிகிச்சை பெறவும் முன் வர வேண்டும். தொடர்ச்சியாக தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்,'' என்றனர். தொடர்ந்து, 'ஓரஸ்' கரைசல் பாக்கெட்டுகளும் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டது.