/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் கை கொடுக்கும் பைக்காரா கூட்டு குடிநீர் திட்டம்
/
மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் கை கொடுக்கும் பைக்காரா கூட்டு குடிநீர் திட்டம்
மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் கை கொடுக்கும் பைக்காரா கூட்டு குடிநீர் திட்டம்
மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் கை கொடுக்கும் பைக்காரா கூட்டு குடிநீர் திட்டம்
ADDED : மே 13, 2024 11:53 PM

ஊட்டி:சோலுார் பேரூராட்சி மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகிக்க, பைக்காரா கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
ஊட்டி அருகே சோலுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 8,800 பேர் வசிக்கின்றனர். அந்தந்த வார்டுகளில், 30க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த வார்டில் உள்ள நீராதாரத்திலிருந்து கொண்டு வரப்படும் தண்ணீர் தொட்டியில் சேமித்த பின், வார்டுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. கடந்தாண்டில் பருவமழை பொய்த்ததாலும், நடப்பாண்டில் ஏப்., இறுதி வரை கோடை மழை பெய்யவில்லை.
இதனால், வார்டு பகுதிகளில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஊற்று நீரை தேடி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. 'சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும்,' என, வார்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜன், உத்தரவின் பேரில், சோலுார் பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்ஷாத் தலைமையில், பைக்காரா கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது.
அதன்படி, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்பி, வார்டுகளில் உள்ள குடிநீர் தொட்டியில் சேமித்த பின், அந்தந்த வார்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு, பொது குழாய் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
பேரூராட்சி செயல் அலுவலர் ஹர்ஷாத் கூறுகையில், '' வார்டுகளில் சீராக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பைக்காரா கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து, லிட்டருக்கு, 16 பைசா வீதம் தண்ணீர் பெறப்பட்டு, வார்டில் உள்ள பிரதான தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டு வினியோகித்து வருகிறோம். அதற்கான பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.'' என்றார்.

