/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலமுருகன் கோவில் ஆண்டு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
பாலமுருகன் கோவில் ஆண்டு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
பாலமுருகன் கோவில் ஆண்டு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
பாலமுருகன் கோவில் ஆண்டு விழா; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஏப் 03, 2024 10:24 PM

குன்னுார் : குன்னுார் அருவங்காடு காந்திநகர் பகுதியில் உள்ள தென்பழனி பாலமுருகன் கோவிலில், 8ம் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது.
குன்னுார் அருவங்காடு காந்திநகர் கிராமத்தில் தென்பழனி பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 8வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி கடத்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மகாதீபாராதனை அபிஷேக அலங்காரம் ஆகியவை நடந்தது.
திருவிழா நாளில், கணபதி ஹோமம் சிறப்பு அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தது.
விழாவையொட்டி அருவங்காடு மட்டுமின்றி, குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் காந்தி நகர் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.