/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆற்றில் கிடக்கும் மூங்கில்கள்: அகற்றும் பணி துவக்கம்
/
ஆற்றில் கிடக்கும் மூங்கில்கள்: அகற்றும் பணி துவக்கம்
ஆற்றில் கிடக்கும் மூங்கில்கள்: அகற்றும் பணி துவக்கம்
ஆற்றில் கிடக்கும் மூங்கில்கள்: அகற்றும் பணி துவக்கம்
ADDED : பிப் 14, 2025 09:46 PM

கூடலுார்:
கூடலுார் தொரப்பள்ளி அருகே, ஆற்றில் தண்ணீர் செல்ல இடையூறாக கிடக்கும் சாய்ந்த மூங்கில்களை அகற்றும் பணியை வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.
கூடலுாரில் இருந்து தொரப்பள்ளி வழியாக செல்லும் ஆற்று நீர் முதுமலை வழியாக மாயாறு ஆற்றில் இணைகிறது. கோடை காலத்தில், வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கூடிய முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.
கடந்த ஆண்டு பருவ மழையின் போது, ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றின் கரையில் இருந்த காய்ந்த மூங்கில்கள், மரங்கள் காற்றில் சாய்ந்தன. இதனால், ஆற்று நீர் செல்ல இடையூறு ஏற்பட்டுள்ளது.
தற்போது, கோடைகாலம் துவங்கி உள்ள நிலையில், இப்பகுதிகளில் ஆற்று நீர் செல்ல மூங்கில்கள் இடையூறாக உள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், ஆற்று நீர் செல்ல இடையூறாக ஆற்றில் கிடக்கும் மூங்கில்கள், மரங்களை பொக்லைன் மூலம் அகற்றும் பணியை இருவயல் பகுதியில் வனத்துறையினர் துவங்கியுள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பருவமழையின் போது, ஆற்றில் சாய்ந்த காய்ந்த மூங்கில்கள், மரங்கள் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், தொரப்பள்ளி இருவயல் முதல் நெல்லிக்குன்னு பிடரல்லா பாலம்வரை ஆற்றில் சாய்ந்து கிடக்கும் காய்ந்த மூங்கில்கள்; மரங்களை அகற்றும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆற்றில் தண்ணீர் தடை இன்றி செல்லும்,' என்றனர்.