/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோரண மாலையாக வாழை! சுற்றுலா பயணிகள் வியப்பு
/
தோரண மாலையாக வாழை! சுற்றுலா பயணிகள் வியப்பு
ADDED : மே 20, 2024 11:39 PM

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆயிரம் காய்கள் கொண்ட வாழை குலையை, சுற்றுலா பயணிகள் வியப்புடன், கண்டுக்களித்து செல்கின்றனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில், கடந்த,10ம் தேதி, 126வது மலர்க்கண்காட்சி துவங்கியது. 10 நாட்கள் நடந்த கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. கண்காட்சியில், பாரம்பரியமிக்க மலை ரயில் இன்ஜின், டிஸ்னி வேர்ல்ட் ஆகியவை, பல ஆயிரம் மலர்களால் உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டது.
இதனை சுற்றுலா பயணிகள், கண்டுக்களித்தனர். இந்நிலையில், பூங்கா நிர்வாகம் சார்பில், மலர் தொட்டிகளுக்கு நடுவே, ஒரே குலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட காய்கள் உள்ள வாழை குலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டுக்களித்து செல்வதுடன், வாழை குலையின் அருகில் நின்று ஆர்வத்துடன் 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.

