/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்
/
தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பறிமுதல்
ADDED : பிப் 21, 2025 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் மற்றும் தேவாலா பகுதிகளில், நெல்லியாளம் நகராட்சி கமிஷனர் முனியப்பன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள், வருவாய் துறையினர் இணைந்து, கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் அவர்கள் மற்றும் டம்ளர்கள் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவற்றை பறிமுதல் செய்த போது கடை உரிமையாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 3,500 ரூபாய் அபராதம் விதித்தனார்.