/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரத்தில் சுற்றப்பட்டுள்ள முள் கம்பி சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு
/
மரத்தில் சுற்றப்பட்டுள்ள முள் கம்பி சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு
மரத்தில் சுற்றப்பட்டுள்ள முள் கம்பி சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு
மரத்தில் சுற்றப்பட்டுள்ள முள் கம்பி சுற்றுலா பயணிகளுக்கு பாதிப்பு
ADDED : மே 26, 2024 11:37 PM

ஊட்டி;ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஒரு மரக்கிளையில் முள் கம்பி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுலா வரும் சிறுவர், சிறுமியருக்கு காயம் ஏற்படுகிறது.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், நுாற்றாண்டு பழமையான அரியவகை மரங்கள் உள்ளன. பூங்காவுக்கு கூடுதல் அழகு சேர்ப்பதில் இந்த மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் பூங்கா நிர்வாகம் மரங்களை பாதுகாத்து வருகிறது.
பூங்காவுக்கு சுற்றுலா வரும் சிறுவர்கள் தாழ்வாக உள்ள பக்கவாட்டு மரக்கிளைகளில் தொங்கியும், மரங்களின் மேல் ஏறியும் விளையாடுவது வழக்கம்.
இதனால், சிறுவர் விழுந்து காயமடையாமல் இருக்கவும், மரக்கிளைகள் உடையாமல் இருக்கவும், பூங்கா நிர்வாகம் சார்பில், மரக்கிளைகளில் முள் கம்பி சுற்றியுள்ளது.
இந்நிலையில், கம்பி கட்டி உள்ளதை தெரியாமல், மரக்கிளைகளின் அடியில் குனிந்து விளையாடும் சிறுவர்களுக்கு காயம் ஏற்படுகிறது. பூங்கா மலர் கண்காட்சியின் போது, மழைக்கு சுற்றுலா பயணிகள் பலர் மரத்தடியில் ஒதுங்கிய போது, ஒரு சிறுவனுக்கு முள்கம்பி நெற்றியில் குத்தி காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டிய சம்பவம் நடந்தது.
எனவே, பூங்கா நிர்வாகம், மரக்கிளையை பாதுகாக்க, முள்கம்பி கட்டுவதற்கு மாறாக, மாற்று ஏற்பாடு செய்வது அவசியம்.

