/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குரைக்கும் மானை வேட்டையாடியவர் கைது
/
குரைக்கும் மானை வேட்டையாடியவர் கைது
ADDED : ஏப் 15, 2024 12:36 AM

கூடலுார்;கூடலுார் அருகே, கம்பி வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய குரைக்கும் மானை வேட்டையாடி, இறைச்சியை சமைக்க முயன்ற நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் கோழிப்பாலம் அருகே, மானை வேட்டையாடி சமைப்பதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ்பிரபு உத்தரவுபடி, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் நேற்று மாலை கோரிப்பாலம் பகுதியில், ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், புஷ்பராஜ்,50, என்பவர், குரைக்கும் மானை வேட்டையாடி, அதன் இறைச்சியை சமைக்க முயன்றது தெரியவந்தது. வனத்துறையினர் அவரை கைது செய்து, இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, வீட்டின் அருகே புதைத்து வைக்கப்பட்டிருந்த மானின் தலை, கால் மற்றும் தோலையும் மீட்டனர்.
விசாரணையில், 'அவரின் தேயிலை தோட்டத்தை ஒட்டி அமைக்கப்பட்ட கம்பி வேலியில், குரைக்கும் மானின் தலை சிக்கி, உயிருக்கு போராடி கொண்டிருந்தது. அதனை புஷ்பராஜ் வேட்டையாடினார்,' என்பது தெரிய வந்தது.

