/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மர்ம நபர்களால் தடுப்பணை உடைப்பு; அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு

UPDATED : ஆக 07, 2024 08:16 AM
ADDED : ஆக 06, 2024 09:45 PM

கோத்தகிரி : கோத்தகிரி ஈளாடா தடுப்பணை மர்ம நபர்களால், நள்ளிரவில் உடைக்கப்பட்ட புகாரை அடுத்து கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு, ஈளாடா தடுப்பணையில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. 30 ஆயிரம் மக்களின், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் ஈளாடா தடுப்பணையை, சமூக விரோதிகள் சிலர், இரவு நேரத்தில் உடைத்துள்ளதால் தண்ணீர் வீணாகி வருகிறது.
புகாரின் பேரில், கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார். அப்போது, 'அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை, மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். மாறாக, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த கூடாது; தடுப்பணையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்,' என, துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜா, கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, செயல் அலுவலர் இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உட்பட அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.