தொழிலாளர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் அவசியம்
தொழிலாளர் குடியிருப்பில் அடிப்படை வசதிகள் அவசியம்
ADDED : ஜூன் 10, 2026 09:31 PM
கூடலுார்: ‘கூடலுார் எஸ்டேட் பகுதிகளில், மனித –வனவிலங்கு மோதலை தடுக்க, தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டது.
கூடலுார் டி.எப்.ஓ., அலுவலகத்தில்,மனித–விலங்கு பிரச்னைகளை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. வனச்சரகர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். உதவி வன பாதுகாவலர் சீனிவாசன் தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., குணசேகரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ‘எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மின்விளக்கு, கழிப்பறை, சாலை, நடைபாதையை சீரமைக்க வேண்டும். வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க எஸ்டேட் பகுதிகளில் சோலார் மின்விளக்கு அமைக்க வேண்டும். தொழிலாளர்களை நிர்வாகத்தினர் வாகனங்களில் வேலைக்கு அழைத்து செல்ல வேண்டும். தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு, குழு காப்பீட்டு செய்து தர வேண்டும்,’ ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
