/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் தேயிலை செடிகளை பாதுகாக்கும் பாக்கு மட்டைகள்
/
கூடலுாரில் தேயிலை செடிகளை பாதுகாக்கும் பாக்கு மட்டைகள்
கூடலுாரில் தேயிலை செடிகளை பாதுகாக்கும் பாக்கு மட்டைகள்
கூடலுாரில் தேயிலை செடிகளை பாதுகாக்கும் பாக்கு மட்டைகள்
ADDED : மே 01, 2024 12:21 AM

கூடலுார்;கூடலுார் பகுதியில், வெயிலின் தாக்கத்திலிருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க, விவசாயிகள் பாக்கு மட்டையை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுாரில் கடந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் ஏமாற்றியதுடன், நடப்பு ஆண்டும் கோடை மழையும் ஏமாற்றி வருகிறது. இதனால், வறட்சியின் தாக்கம் அதிகரித்து, நிலத்தடி நீர் குறைந்து வருவதால், பொதுமக்கள் மற்றும் வனவிலங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
மேலும், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால், தேயிலை உற்பத்தியும் வெகுவாக குறைந்துள்ளது. அதிகரித்து வரும் வெயில் காரணமாக, பல பகுதிகளில் தேயிலை செடிகள் கருகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தேயிலை செடிகளை பாதுகாக்க விவசாயிகள், காய்ந்த பாக்கு மட்டைகளை தேயிலை செடியின் மீது, போட்டு பாதுகாக்கும் பணியை துவங்கி உள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'ஏற்கனவே, பசுந்தேயிலைக்கு உரிய விலை இன்றி சிரமப்பட்டு வருகிறோம். நடப்பு ஆண்டு கோடை மழையும் ஏமாற்றிவருவதால், தேயிலை துாள் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது.
தொடரும், வெயிலின் தாக்கத்தால் தேயிலை செடிகள் கருகும் சூழல் உள்ளதால், அவைகளை பாதுகாக்க, காய்ந்த பாக்கு மட்டைகளை போட்டு மூடி பாதுகாத்து வருகிறோம். மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும்,' என்றனர்.