/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
/
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ADDED : ஜூலை 05, 2024 01:28 AM
கோத்தகிரி;கோத்தகிரி அருகே, கரடி தாக்கியதில் காயம் அடைந்த பெண் தொழிலாளி, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளில் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது, பலா சீசன் என்பதால், தேயிலை தோட்டங்களில் ஊடுப்பயிராக வளர்க்கப்படும் பலா மரங்களில் காய்த்துள்ள பழங்களை உண்ணுவதற்காக, கரடிகள் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில், கோத்தகிரி கொட்டக்கம்பை பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளி லட்சுமி,57, சக தொழிலாளர்களுடன் தேயிலை தோட்டத்தில், பசுந்தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, புதர்மறைவில் இருந்த கரடி, திடீரென வெளியேறி, லட்சுமியை தாக்கி உள்ளது. படுகாயம் அடைந்த லட்சுமி கூச்சலிடவே, அருகில் பணியில் இருந்த சக தொழிலாளர்கள், அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.