/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பகலில் கரடி உலா; அச்சத்தில் மக்கள்
/
பகலில் கரடி உலா; அச்சத்தில் மக்கள்
ADDED : ஜூலை 03, 2024 09:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் - கோத்தகிரி சாலை வட்டப்பாறை அருகே உலா வந்த கரடியால் வாகனங்களில் சென்றவர்கள் அச்சமடைந்தனர்.
நேற்று முன்தினம் காலை குன்னுார்-கோத்தகிரி சாலை வட்டப்பாறை அருகே கரடி ஒன்று உலா வந்தது. அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களும் அச்சமடைந்து வாகனங்களை நிறுத்தினர்.
தொடர்ந்து அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இந்த 'வீடியோ' தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் முன்னெச்சரிக்கையுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.