/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் கரடி உலா: விரட்டும் பணி தீவிரம்
/
குன்னுாரில் கரடி உலா: விரட்டும் பணி தீவிரம்
ADDED : மே 16, 2024 06:17 AM

குன்னுார், : குன்னுாரில் தடம் மாறி வந்து, 3 நாட்களாக நகரில் உலா வரும் கரடியை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குன்னுார் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகள் வனத்தில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவை தேடி வந்து செல்கிறது.
இந்நிலையில், கடந்த, 13ம் தேதி தடம் மாறி வந்த கரடி டென்ட்ஹில், குன்னுார் பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு துறை, ராஜாஜி நகர். பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு பெட்போர்டு, பகுதிகளில உலா வந்தது. நேற்று பகல் நேரத்தில் சிம்ஸ் பார்க், டீ போர்டு பகுதிகளில் உலா வந்தது.
ரேஞ்சர் ரவீந்திரநாத் தலைமையில், 10 பேர் கொண்ட குழுவினர் கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் வெலிங்டன் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் குப்பைகளை வெளிய வைப்பதையும் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் நகர பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக மக்கள் நடந்து செல்ல வேண்டும்,' என்றனர்.