
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்னர் அதில் பால் ஊற்றி குக்கரை மூடி, இரண்டு விசில் விட்டு, தீயைக் குறைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, அதே வாணலியில் உள்ள நெய்யில் குக்கரில் உள்ள பீட்ரூட்டை பாலுடன் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து பால் வற்றும் வரை நன்கு கிளற வேண்டும்.
பால் வற்றியதும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அப்படி கிளறும் போது, பீட்ரூட் வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும். இந்நிலையில் மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு கிளறி, வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், பீட்ரூட் அல்வா தயார்.