/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பரதநாட்டியம் அரங்கேற்றம் அசத்திய மாணவிகள்
/
பரதநாட்டியம் அரங்கேற்றம் அசத்திய மாணவிகள்
ADDED : மே 16, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார், : பந்தலுாரில் நடந்த பரதநாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் அசத்தினர்.
பந்தலுார் அருகே தேவாலா பகுதியில் சுவாதி கிளாசிக்கல் நடன பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆண்டு தோறும் இங்கு பயிற்சி பெறும் மாணவிகளின் அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. நேற்று நடந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை தேவாலா மகளிர் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் பந்தலுார் நியூஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் உஜ்வல்தீப்காடேஸ்வரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அதில், பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் ஆகிய நடனங்கள் அரங்கேற்றம் செய்யப்பட்டது. அதில், பயிற்சி பெற்ற மாணவிகள் தங்கள் நடனங்களில் அசத்தினர்.