/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பவானி ஆற்றில் அலாரம் செப்டம்பரில் வருது ஐ.ஐ.டி., குழு
/
பவானி ஆற்றில் அலாரம் செப்டம்பரில் வருது ஐ.ஐ.டி., குழு
பவானி ஆற்றில் அலாரம் செப்டம்பரில் வருது ஐ.ஐ.டி., குழு
பவானி ஆற்றில் அலாரம் செப்டம்பரில் வருது ஐ.ஐ.டி., குழு
ADDED : ஆக 01, 2024 12:55 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஆபத்தான பகுதிகளில் அலாரம் வைப்பது தொடர்பான ஆய்வு மேற்கொள்ள, சென்னை ஐ.ஐ.டி., தொழில்நுட்ப குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் வரவுள்ளனர்.
பவானி ஆற்றில் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் போது நீர் வரத்து அதிகரிக்கும். இதனால், அச்சமயத்தில் பவானி ஆற்றில் குளிப்பவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
இதையடுத்து பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகளில் மக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக, பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, அலாரம் வைக்க ஐ.ஐ.டி., தொழில்நுட்ப குழு சென்னையில் இருந்து வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது;
பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகள் என வெள்ளிப்பாளையம் பாயிண்ட் 1, 2, 3, சிறுமுகை, ஆலாங்கொம்பு, ராமர் கோவில், அம்மன் பழத்தோட்டம், வச்சினம்பாளையம், வேடர் காலனி, ஊமபாளையம், கல்லார் கார்டன். தூரி பாலம், ரயில்வே கேட், எஸ்.எம். நகர் வாட்டர் டேங், சமயபுரம் செக்டேம், வனபத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, பம்ப் ஹவுஸ், குண்டுகல் துறை, விளாமரத்தூர் என 19 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் சென்னை ஐ.ஐ.டி.,யில் இருந்து வரும் தொழில்நுட்ப குழுவினர் அலாரம் வைப்பதற்கான ஆய்வு நடத்த வரும் செப்டம்பர் மாதம் வர உள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.