/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிதர்காடு காமராஜ் நகர் பகுதி சாலையை ஆக்கிரமித்து வேலி
/
பிதர்காடு காமராஜ் நகர் பகுதி சாலையை ஆக்கிரமித்து வேலி
பிதர்காடு காமராஜ் நகர் பகுதி சாலையை ஆக்கிரமித்து வேலி
பிதர்காடு காமராஜ் நகர் பகுதி சாலையை ஆக்கிரமித்து வேலி
ADDED : ஏப் 29, 2024 01:29 AM

பந்தலுார்:'பந்தலுார் பிதர்காடு காமராஜ் நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட வேலியை அகற்ற வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பந்தலுார் அருகே, பிதர்காடு பகுதியில் காமராஜ் நகர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. அதில், சாலையை ஒட்டி தனியார் ஒருவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்நிலையில் சாலை ஓரத்தில் ஊராட்சி மூலம் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது.
அங்கு நிலத்தின் உரிமையாளர் ஏற்கனவே அமைத்துள்ள வேலியை தாண்டி, சாலை ஓரத்தில் கற்கள் நட்டு கம்பியில் வேலி அமைத்துள்ளார். இதனால் வாகனங்கள் வரும்போது வழி விடுவதிலும், பாதசாரிகள் நடந்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. பொது மக்கள் கூறுகையில், ' இப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ள வேலியை அகற்ற வேண்டும்,' என்றனர்.