/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோர மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிருப்தி

ADDED : மார் 29, 2024 12:19 AM

கூடலுார்:கூடலுார் பகுதி சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை வைப்பதை தடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில், சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகை, டிஜிட்டல் பேனர் வைக்க அனுமதியில்லை. எனினும், சிலர் மரங்களில், ஆணி அடித்து விளம்பர பலகை வைத்து வருகின்றனர்.
தற்போது, கூடலுார் சாலை ஓர மரங்களில் இவ்வாறான விளம்பரங்கள் அதிகளவில் வைக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கவோ, அகற்றவோ நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'பசுமையான மரங்களில், விளம்பர பலகைகள் வைப்பதற்காக ஆணி அடித்தால், மரங்கள் பாதித்து 'பட்டு' போயிவிடும். மேலும், மரங்களில் அகற்றப்படாத ஆணிகள், மரங்களை சார்ந்து வாழும் குரங்குகள், மலபார் அனில் போன்ற உயிரினங்களுக்கு காயங்களை ஏற்படுத்தும். எனவே, மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள், டிஜிட்டல் போர்டுகள் வைப்பதை தடுக்க வேண்டும்,' என்றனர்.