தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ நடனமாடி ஓட்டு சேகரித்த பா.ஜ., வேட்பாளர்

நடனமாடி ஓட்டு சேகரித்த பா.ஜ., வேட்பாளர்

நடனமாடி ஓட்டு சேகரித்த பா.ஜ., வேட்பாளர்


ADDED : ஏப் 17, 2024 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2024 12:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி;கோத்தகிரியில் நடனமாடி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட, நீலகிரி தொகுதி பா.ஜ., வேட்பாளர் முருகனுக்கு கிராம மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

நீலகிரி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முருகன் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர், தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் படுக இன மக்கள் வசிக்கும் கிராமங்களில், நடனமாடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில், குன்னுார் சட்டசபைக்கு உட்பட்ட கோத்தகிரி மற்றும் கீழ் கோத்தகிரி, சோலுார்மட்டம், தேனாடு உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கு சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கோத்தகிரி பகுதிக்கு வந்த முருகன், கிராமத்தில் நடனமாடி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் பெண்கள்; சிறுமியர் நடனமாடினர். பின்னர் அந்த பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் வழிபட்டார். அவருக்கு பல கிராம மக்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us