/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி பயம் ;காங்., கேரள மாநில தலைவர் பேட்டி
/
தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி பயம் ;காங்., கேரள மாநில தலைவர் பேட்டி
தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி பயம் ;காங்., கேரள மாநில தலைவர் பேட்டி
தேர்தலில் பா.ஜ.,வுக்கு தோல்வி பயம் ;காங்., கேரள மாநில தலைவர் பேட்டி
ADDED : ஏப் 12, 2024 11:46 PM

பாலக்காடு;லோக்சபா தேர்தலில், தோல்வி பயத்தில் பிரதமர் மோடி பிரசாரத்தில் தீவிரம் காட்டுகிறார். இம்முறை காங்., வலுவான நிலையில் ஆட்சி அமைக்கும், என, கேரள மாநில காங்., தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காட்டில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட, காங்., மாநில தலைவர் ரமேஷ் சென்னித்தலா நிருபர்களிடம் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில் தோல்வி பயத்தில், பிரதமர் மோடி பிரசாரத்தில் தீவிரம் காட்டுகிறார். இம்முறை காங்., வலுவான நிலையில் ஆட்சி அமைக்கும். மோடி அரசு அளித்த அனைத்து உத்திரவாதமும் தோல்வி கண்டுள்ளன. மத்திய-, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கை காரணமாக, கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெறும்.
நாட்டில், 'இண்டியா' கூட்டணி பெரும்பான்மை வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்ததும் குடியுரிமை திருத்தச் சட்டம் உட்பட மோடி அரசின் மக்கள் விரோத சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
'இண்டியா' கூட்டணியின் முகமாக விளங்கும் ராகுல் போட்டியிடும், வயநாடு தொகுதியில் மா.கம்யூ., கட்சி வேட்பாளரை நிறுத்தியிருக்கக் கூடாது.
'காங்கிரஸ் இல்லா இந்தியா' என்ற பா.ஜ.வின் இலக்கை அடைய, அவர்களுக்கு உதவும் நிலைப்பாட்டுடன் மா.கம்யூ., கட்சி செயல்படுகிறது. இந்த உள்நோக்கத்தால் தான், முதல்வர் பினராயி விஜயன், ராகுலை மட்டும் விமர்சித்து பேசுகிறார். தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக ராகுல், பிரியங்கா, மல்லிகார்ஜுன் கார்கே, சச்சின் பைலட் ஆகிய தலைவர்கள் வரும் நாட்களில் கேரளா மாநிலத்திற்கு வர உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

