ADDED : ஆக 13, 2024 11:45 PM

கருமத்தம்பட்டி;சுதந்திர தினத்தை ஒட்டி, பா.ஜ., இளைஞரணி சார்பில், கருமத்தம்பட்டியில், தேசிய கொடி ஏந்தி, இரு சக்கர வாகன பேரணி நடந்தது.
சுதந்திர தினத்தை ஒட்டி, சூலுார் சட்டசபை தொகுதி இளைஞரணி சார்பில், தேசிய கொடி ஏந்தியபடி இரு சக்கர வாகன பேரணி, கருமத்தம்பட்டியில் துவங்கி சோமனுாரில் நிறைவடைந்தது. நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு, நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட செயலாளர் சிதம்பரம் பேசுகையில், ''பல லட்சம் தேசபக்தர்களை தியாகம் செய்து சுதந்திரத்தை பெற்றோம். அதனை பேணி பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. தியாகிகள் கண்ட அகண்ட பாரத கனவை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும், என்றார்.
இளைஞரணி மாவட்ட தலைவர் அருண்குமார், பொதுச்செயலாளர் கவுதம், கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் பிரகாஷ், சுப்பிரமணியம், பிரபாகரன், மகளிரணி தலைவர் ரேவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.