/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பா.ஜ.,வுடன் கூட்டணி சேர விடாமல் பிற கட்சிகளை தடுக்கும் முயற்சியில் தி.மு.க.,: பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் குற்றச்சாட்டு

ADDED : மார் 08, 2025 12:36 AM

கோத்தகிரி; 'பா.ஜ., வுடன் கூட்டணி சேர விடாமல், பிற கட்சிகளை தடுக்கும் முயற்சியில், தி.மு.க., ஈடுபடுகிறது,' என, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் குற்றம்சாட்டி உள்ளார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில், மும்மொழி கொள்கை குறித்து கையெழுத்து பெற்று மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வந்த, பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
பா.ஜ., மக்களுக்கான ஒரு ஜனநாயக கட்சி. இந்த ஆட்சியில் கடந்த, 500 ஆண்டுகாலம் தீர்க்க முடியாத ராமஜென்ம பூமி பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நாட்டில், 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்த பெருமை பா.ஜ.,வை சேரும். ஒரே நாடு, ஒரே தேர்தல், அணை பாதுகாப்பு மசோதா வரிசையில் புதிய கல்வி கொள்கையும் ஒன்று. தமிழகத்தில், 13 ஆயிரம் வகுப்பறைகள் மரத்தடியில் நடக்கிறது. இதற்கு மாநில அரசு தீர்வு காணப்படவில்லை.
புதிய கல்வி கொள்கை தற்போது மக்களிடையே, சென்றடைகிறது என்றவுடன், தி.மு.க., அதை எதிர்க்கிறது. புதிய கல்வி கொள்கையில், மாநிலத்தை பொருத்தமட்டில் தமிழ் கட்டாய பாடமாக இருக்கும். தமிழ் வழியில் தான் கல்வி கற்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஆங்கில வழி கல்வியை கற்கின்றனர். தமிழை ஒரு பாடமாக தான் வைத்துள்ளனர்.
தமிழகத்தில், 2.5 கோடி மக்கள் வேற்று மொழி பேசுபவர்களாக உள்ளனர். அந்த மக்கள், அவர்களது மொழியை கற்க வேண்டும் என்றால், இரு மொழி கொள்கையால் அது சாத்தியமில்லை. மும்மொழி கொள்கை, அரசு பள்ளி மாணவர்களுக்கு வரப்பிரசாதம்.
2026ல் பா.ஜ., வலுவான கூட்டணியுடன் ஆட்சி அமைக்கும். பா.ஜ., வுடன், பிற கட்சிகள் கூட்டணி சேரவிடாமல் தடுக்கும் முயற்சியில் தி.மு.க., ஈடுபட்டு வருகிறது. மும்மொழி கொள்கை குறித்து கையெழுத்து பெறும் இயக்கத்தில் குறைந்த பட்சம் ஒருகோடி பேரிடம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ., நீலகிரி மாவட்ட தலைவர் தர்மன், பொது செயலாளர்கள் குமார், பரமேஸ்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.