ADDED : ஆக 17, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.
குன்னுார் அரசு லாலி மருத்துவமனையில், இந்து இளைஞர் முன்னணி சார்பில்,78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.
இந்து இளைஞர் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் கார்த்திக், இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
அதில், 15 க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.

