/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காப்பு காட்டில் நீல குறிஞ்சி; அத்துமீறி நுழைந்தால் அபராதம்
/
காப்பு காட்டில் நீல குறிஞ்சி; அத்துமீறி நுழைந்தால் அபராதம்
காப்பு காட்டில் நீல குறிஞ்சி; அத்துமீறி நுழைந்தால் அபராதம்
காப்பு காட்டில் நீல குறிஞ்சி; அத்துமீறி நுழைந்தால் அபராதம்
ADDED : செப் 17, 2024 10:02 PM

ஊட்டி : 'ஊட்டி அருகே, காப்புகாட்டில் மலர்ந்த நீலக்குறிஞ்சி மலர்களை பார்வையிட யாராவது அத்துமீறி நுழைந்தால் அபராதம் விதிக்கப்படும்,' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலக்குறிஞ்சி மலர் செடிகள் மலைப்பாங்கான இடங்களில் மட்டுமே வளர்கின்றன. இதன் உயரம், 30 முதல் 60 செ.மீ., வரையில் இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் முதல், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர்கள் நீலகிரி மாவட்டத்தில் காணப்படுகிறது.
அதில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் தனித்துவமானது. இதனை பற்றி சங்க கால இலக்கியங்களில் கூட கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊட்டி அருகே எப்பநாடு, பிக்கபத்திமந்து மலைச்சரிவுகளில், 12 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி (ஸ்டாபிலாந்தஸ் குந்தியானஸ்) மலர்கள் பூத்து படர்ந்துள்ளது.
அந்த இடம் கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட காப்பு காடாக உள்ளது. இந்த பகுதியில் குறிஞ்சி மலர்களை காண, சிலர் அத்துமீறி நுழைவதாக வனத்துறைக்கு புகார்கள் சென்றுள்ளன.
ரேஞ்சர் செல்வகுமார் கூறுகையில், '' நீலக்குறிஞ்சி பூத்துள்ள இடம் காப்பு காடாகும். குறிஞ்சி மலரை பார்க்க உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். இவர்களை அழைத்து வருபவர்களுக்கும், காப்பு காட்டில் அத்துமீறு நுழைபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.