/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எல்லை சோதனை சாவடி கலெக்டர் திடீர் ஆய்வு
/
எல்லை சோதனை சாவடி கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : செப் 10, 2024 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி:சுற்றுலா வாகனங்களில் தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக்' பொருட்கள் கொண்டு வரப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
'நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணியர் இ - பாஸ் பெற்று வர வேண்டும்,' என்ற நடைமுறை இன்னும் அமலில் உள்ளது. இதற்காக, கல்லார் துாரி பாலம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து வருவாய் துறை, உள்ளாட்சி துறையினர் வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர். மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் கொண்டு வரப்படுகிறதா என்பதை கண்காணித்து வருகின்றனர். இப்பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு அறிவுரை வழங்கினார்.