/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
/
பந்தலுார் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
ADDED : ஏப் 02, 2024 02:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்:பந்தலுார் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
பஷீர், அபு மற்றும் சலாம் ஆகியோர் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து, பள்ளிவாசல் கமிட்டி செயலாளர் அனஸ், முஸ்லிம் ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் உம்மர், அபு, ஜலீல், பி. உம்மர் உள்ளிட்டோர் அனைவரையும் வரவேற்றனர்.
கமிட்டி சார்பில் அனைவருக்கும் நோன்பு விருந்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வனச்சரகர் சஞ்சீவி, நெல்லியாளம் நகர மன்ற தலைவர் சிவகாமி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் அஷ்ரப், உட்பட பலர் பங்கேற்றனர். சகாபி முகைதீன் நன்றி கூறினார்.

