/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'அறிவை தேடுவதே உண்மையான வெற்றி' மாணவர்களுக்கு பிரிகேடியர் அறிவுரை
/
'அறிவை தேடுவதே உண்மையான வெற்றி' மாணவர்களுக்கு பிரிகேடியர் அறிவுரை
'அறிவை தேடுவதே உண்மையான வெற்றி' மாணவர்களுக்கு பிரிகேடியர் அறிவுரை
'அறிவை தேடுவதே உண்மையான வெற்றி' மாணவர்களுக்கு பிரிகேடியர் அறிவுரை
ADDED : மார் 02, 2025 11:57 PM

குன்னுார், ; 'உண்மையான வெற்றி அறிவை தேடுவதில் தான் உள்ளது; இது போன்ற போட்டிகள் அறிவுசார் சாதனைகளுக்கான படி கல்லாக அமையும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
குன்னுார் அருகே உள்ள, வெலிங்டன், ராணுவ பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் வினாடி-வினா போட்டி நடந்தது.
ஆர்மி பப்ளிக் பள்ளி, வெலிங்டன் கேந்திரிய வித்யாலயா, சின்ன வண்டிச்சோலை கன்டோன்மென்ட் பள்ளி, ஹோலி இன்னசென்ட் பள்ளி, ஊட்டி குட்ஷெப்பர்டு பள்ளி, பெஸ்ட் பப்ளிக் பள்ளி, நசரத் கான்வென்ட் மற்றும் கோத்தகிரி பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இறுதி சுற்றில், சைபர், ஐடி, கூகுள், தி ஆன்சர், யூகிக்கும் சுற்று, விண்வெளி மற்றும் வானியல், மற்றும் ரேபிட் பயர் போன்றவை இடம் பெற்றது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வெலிங்டன் ராணுவ பள்ளி தலைவர், பிரிகேடியர் பிரஸ்டி பேசுகையில், ''அறிவியல் வினாடி-வினா போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களின் கற்றல் ஆர்வம், உற்சாகம், விடா முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.
போட்டியில் பங்கேற்ற அனைவருமே, வெற்றி பெற்றவர்கள் தான். ஏனெனில், உண்மையான வெற்றி அறிவை தேடுவதில் தான் உள்ளது.
இதுபோன்ற போட்டிகள் சிறந்த கல்வி மற்றும் அறிவுசார் சாதனைகளுக்கான, படிக்கல்லாக அமையும்; மாணவர்கள் தங்கள் அறிவியல் ஆராய்ச்சியை ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் தொடர வேண்டும்,'' என்றார்
பள்ளி நோடல் அதிகாரி கர்னல் சங்கீதா சர்தானா, முதல்வர் ஹேமா பிராங்க் முன்னிலை வகித்து பேசினர். ஏற்பாடுகளை கிளப் பொறுப்பாளர் சத்தியன் செய்திருந்தார்.
பயற்சியாளர்களாக இயற்பியல் ஆசிரியர் ரோசலின், அருவங்காடு 'கேவி' பள்ளி நுாலகர் சாமுவேல் பங்கேற்றனர்.
அறிவியல் துறை தலைவர் ஸ்வேதா தீட்சித் நன்றி கூறினார்.