/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் 6 ஆண்டுக்கு பிறகு நீராவி இன்ஜின் இயக்கம்

ADDED : மார் 04, 2025 12:35 AM

குன்னுார், ; குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு, 6 ஆண்டுக்கு பிறகு, 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜினில், இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் பயணித்தனர்.
குன்னுார்- ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும், நுாற்றாண்டு பழமை வாய்ந்த, 'யுனெஸ்கோ' அங்கீகாரம் பெற்ற, மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் 'எக்ஸ் கிளாஸ்' நீராவி இன்ஜினில், 2 லட்சத்து 81 ஆயிரத்து 400 ரூபாய் வாடகை செலுத்தி, இங்கிலாந்து சுற்றுலா பயணிகள், குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு பயணம் மேற்கொண்டனர்.
நேற்று காலை, 12:00 மணிக்கு குன்னுாரில் புறப்பட்ட இந்த சிறப்பு மலை ரயில், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல் ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டது. பயணிகள் இயற்கை காட்சிகளை ரசித்து 'போட்டோ' எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து, நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த குகைகள்; பாலங்களை பார்வையிட்டு, 2:00 மணிக்கு ஊட்டிக்கு சென்று சேர்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை செய்த, சுற்றுலா வழிகாட்டி பன்னீர் செல்வம் கூறுகையில்,''வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் பல்வேறு இடங்களை சேர்ந்த, 28 சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு மலை ரயிலில் பயணம் செய்தனர்.
இவர்கள் ஊட்டியை சுற்றி பார்த்து, 5ம் தேதி (நாளை) தமிழகத்தின் வேறு சுற்றுலா மையங்களுக்கு பார்வையிட செல்ல உள்ளனர்,'' என்றார்.