/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தம்பி குத்திக்கொலை அண்ணன் தலைமறைவு
/
தம்பி குத்திக்கொலை அண்ணன் தலைமறைவு
ADDED : ஆக 26, 2024 04:44 AM

கூடலுார்: நீலகிரி மாவட்டம், கூடலுார் பி.சி.வி., நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 47. இவரது மனைவி உஷா. இவர்களுக்கு ராகுல், 19, என்ற மகன் இருந்தார். அவர், கூடலுார் அரசு கல்லுாரியில் இளநிலை, 2ம் ஆண்டு படித்து வந்தார்.
உஷாவின் முதல் கணவர் மோகன்குமார், 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு, சணல், சினோய், ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்கள் சதீஷ்குமார்,- உஷாவுடன் வசித்து வருகின்றனர். சினோய், 26, வேலைக்கு செல்லாமல் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், உஷாவிடம் தகராறு செய்துள்ளார். இதை கேட்ட, தம்பி ராகுலை தாக்கியுள்ளார். தகவலறிந்து வீட்டுக்கு வந்த சதீஷ்குமார், வீட்டில் நடந்த தகராறு குறித்து சினோயிடம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த, சினோய் கத்தியால் அவரை தாக்கினார். தடுத்த ராகுலுக்கு கழுத்து மற்றும் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராகுல் நேற்று காலை உயிரிழந்தார். கூடலுார் போலீசார் தலைமறைவான சினோயை தேடி வருகின்றனர்.

