/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'டான்டீ' தேயிலை தோட்டங்களில் 'புரூனிங்' பணி: தொழிலாளர்கள் வரவேற்பு
/
'டான்டீ' தேயிலை தோட்டங்களில் 'புரூனிங்' பணி: தொழிலாளர்கள் வரவேற்பு
'டான்டீ' தேயிலை தோட்டங்களில் 'புரூனிங்' பணி: தொழிலாளர்கள் வரவேற்பு
'டான்டீ' தேயிலை தோட்டங்களில் 'புரூனிங்' பணி: தொழிலாளர்கள் வரவேற்பு
ADDED : ஆக 26, 2024 02:01 AM

கூடலுார்:கூடலுார் பகுதியில் உள்ள டான்டீ தேயிலை தோட்டங்களில் 'புரூனிங்' பணி நடந்து வருகிறது.
கூடலுார், பந்தலுார் பகுதியில், அரசு தேயிலைத் தோட்ட கழகமான 'டான்டீ'க்கு சொந்தமான பாண்டியார், சேரம்பாடி சேரங்கோடு, நெல்லியாளம் தேயிலை தோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, தொழிலாளர்கள் பற்றாக்குறை என்ற காரணத்தை கூறி, பராமரிப்பு இல்லாத, தேயிலை தோட்ட பகுதிகள் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. டான்டீ தொழிலாளர்கள், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
'பராமரிப்பு இல்லாத பகுதிகள் மட்டுமே வனத்துறைக்கு ஒப்படைக்கபட்டது. இதனால், தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என, அரசு தெரிவித்துள்ளது.
எனினும், டான்டீ வசமுள்ள தேயிலை தோட்ட பகுதிகள், தொடர்ச்சியாக பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். தேயிலை செடிகளை முறையாக பராமரிக்க வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், டான்டீயில், ஒப்பந்த முறையில் தேயிலை செடிகளை புரூனிங் செய்யும் பணி நடந்து வருகிறது.
இதனை வரவேற்றுள்ள தொழிலாளர்கள், ' இதேபோன்று, தற்காலிக தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்,' என்றனர்.