ADDED : ஜூலை 01, 2026 07:43 PM
குன்னுார்: குன்னூரில் பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் நடந்தது.
நீலகிரி பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய எதிர்ப்பு தின மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜேக்கப் மோரீஸ் ஒப்பந்த ஊழியர் சங்க நிர்வாகி பாஸ்டின் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், ‘மூன்றாவது ஊதிய மாற்றம் வழங்குவது; புதிய பதவி உயர்வு கொள்கையை அமல்படுத்துவது; உரிய அலவன்ஸ் தருவது ; ஓய்வூதிய பலன்களை, 30 சதவீதமாக உயர்த்தவது,’ என்பன உட்பட, 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் பிரின்ஸ், மாவட்ட உதவி தலைவர் மகாலிங்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கோரிக்கைகள் அடங்கிய மனுவை குன்னூர் பி.எஸ்.என்.எல்., துணை பொது மேலாளரிடம் அளிக்கப்பட்டது.
