/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பி.எஸ்.என்.எல்., சேவை அடிக்கடி பாதிப்பு
/
பி.எஸ்.என்.எல்., சேவை அடிக்கடி பாதிப்பு
ADDED : மே 20, 2024 11:33 PM
குன்னுார்:குன்னுாரில் தலைமை இடமாக கொண்டு பி.எஸ்.என்.எல்.. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே பல இடங்களிலும் 'இன்டர்நெட்' சேவை சரிவர கிடைக்காமல் வாடிக்கையாளர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணியிலிருந்து, இரவு,8:30 வரை பி.எஸ்.என்.எல்., சேவை முழுமையாக துண்டிக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாமல் வெகுவாக பாதிக்கப்பட்டனர்
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற தனியார் மொபைல் இணைப்புகளை விட பி.எஸ்.என்.எல்., இணைப்புகளை அதிகம் வைத்துள்ளனர். அடிக்கடி இதுபோன்று சேவை பாதிப்பு ஏற்படுவதால் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

