/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிம்ஸ் பூங்காவில் கொத்தாக பூத்த பச்சை ரோஜா மலர்கள்
/
சிம்ஸ் பூங்காவில் கொத்தாக பூத்த பச்சை ரோஜா மலர்கள்
சிம்ஸ் பூங்காவில் கொத்தாக பூத்த பச்சை ரோஜா மலர்கள்
சிம்ஸ் பூங்காவில் கொத்தாக பூத்த பச்சை ரோஜா மலர்கள்
ADDED : மே 23, 2024 11:39 PM

குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில், நடவு செய்யப்பட்ட பச்சை ரோஜா மலர்கள் கொத்து, கொத்தாக பூத்து சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.
குன்னுார் சிம்ஸ் பூங்கா, 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பூங்காவில், 85 தாவர குடும்பங்களுக்கு உட்பட்ட, 255 வகைகள் கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாவரங்கள் உள்ளன.
மேலும், 'அரக்கேரியா, ஓக், ருத்ராட்சை, சீமை பனை, மக்னோலியா, பைன், டர்பன்டைன், பெரணி,' உட்பட பல்வேறு மர வகைகளும், ஜப்பான் ரோஜா பச்சை ரோஜா அரிய வகை மலர்களும் உள்ளன. ஏப்., மே மாதங்களில் கோடை சீசனில் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் வகையில், லட்சக்கணக்கில் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு பூங்காவின் டென்னிஸ் மைதான பகுதியில் பல வண்ண ரோஜா செடிகள் இடையே, 5 செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது, பச்சை ரோஜா மலர்கள் கொத்து, கொத்தாக பூக்க துவங்கியுள்ளது. சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.