/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் டிரைவருக்கு திடீர் தலை சுற்றல்; புதரில் மோதி நிறுத்தியதால் நிம்மதி

ADDED : மார் 07, 2025 09:50 PM

கூடலுார் ; மசினகுடி- ஊட்டி சாலையில் சென்ற அரசு பஸ் டிரைவருக்கு, திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் புதரில் மோதி நின்றதால் பயணிகள் உயிர் தப்பினர்.
மசினகுடி மாயாரில் இருந்து, அரசு பஸ், 44 பயணிகளுடன் நேற்று காலை, 7:30 மணிக்கு ஊட்டி நோக்கி சென்றது. பஸ்சை டிரைவர் அசோக்குமார் ஓட்டி வந்துள்ளார். பஸ் மசினகுடியை கடந்து, மாவனல்லா அருகே, சென்று கொண்டிருந்தபோது, டிரைவருக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. அப்போது, பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையோர புதரில் மோதி பஸ்சை நிறுத்தி உள்ளார்.
இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, டிரைவர்; பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அனைவருக்கும், மசினகுடி ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனை செய்ததில், 'டிரைவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கட்டு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது,' என, தெரியவந்தது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். மசினகுடி போலீசார் விசாரித்தனர்.