ADDED : ஜூன் 25, 2026 06:21 PM
கூடலுார்: கூடலுார் மார்த்தோமா நகர் அருகே, கர்நாடகாவில் இருந்து முட்டைகோஸ் ஏற்றி கேரளா செல்லும் லாரி, கவிழ்ந்த விபத்தில் இருவர் காயங்களுடன் உயிர் தப்பினர்.
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து நேற்று முன்தினம், இரவு முட்டைகோஸ் ஏயற்றிய லாரி, கூடலுார் வழியாக கேரளா நோக்கி சென்றது. இரவு, 7:30 மணிக்கு முதுமலையை, கடந்து மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, கூடலுார் நோக்கி வந்த லாரி, மார்த்தோமா நகர் அருகே, கட்டுப்பட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது.
லாரியிலிருந்து முட்டைகோஸ் சாலையில் சிதறியது. இதனால், வாகன போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டது. விபத்தில், கர்நாடகவை சேர்ந்த ஓட்டுனர் வீரபத்திரன், உதவியாளர் ஆனந்த் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். கூடலுார் எஸ்.ஐ., கவியரசு மற்றும் போலீசார், வாகன போக்குவரத்தை சீரமைத்தனர்.
