/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்; கால்நடை வளர்ப்போர் பயன்பெறலாம்
/
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்; கால்நடை வளர்ப்போர் பயன்பெறலாம்
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்; கால்நடை வளர்ப்போர் பயன்பெறலாம்
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்; கால்நடை வளர்ப்போர் பயன்பெறலாம்
ADDED : செப் 15, 2024 11:28 PM
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் வரும், 18ம் தேதி முதல் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நடக்கிறது.
நீலகிரியில் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம், கிராமங்களில் வரும், 18ம் தேதி முதல் அடுத்த மாதம், 15ம் தேதி வரை, நான்காம் சுற்று கன்று வீச்சு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
நோய் தாக்கும் பசு மற்றும் எருமைகளுக்கு கருச்சிதைவு, மலட்டுத்தன்மை, சினை ஈன்றும் தருவாயில் தீவிர காய்ச்சல், நஞ்சு கொடி தாக்குதல், எளிதில் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு மற்றும் பொருளாதார இழப்பு போன்றவற்றை தவிர்க்க, இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இந்த நோய் ஏற்பட்ட மாட்டின் நஞ்சு கொடியை கையாளும் பட்சத்தில், மனிதர்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலமாக, 4 முதல், 8 மாதம் உடைய கிடாரி கன்றுகளுக்கு மட்டும் இலவசமாக செலுத்தப்படுகிறது.
இந்த தடுப்பூசி போடுவதன் மூலம், கிடாரி கன்றுகளுக்கு ஆயுள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எனவே, கால்நடை வளர்ப்போர், கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும்.