/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் 'லோக் அதாலத்' பயன்பெற அழைப்பு
/
நீலகிரியில் 'லோக் அதாலத்' பயன்பெற அழைப்பு
ADDED : செப் 13, 2024 10:18 PM
ஊட்டி : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு தலைவர், நீதிபதி அப்துல் காதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில், ஊட்டி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், குன்னுார், கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் நீதிமன்ற வளாகங்களில், இன்று(14ம் தேதி) லோக் அதாலத் நடக்கிறது.
இதில், நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய, சிறு குற்றம், காசோலை, வாகன விபத்து, நில ஆர்ஜிதம், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத வழக்குகளுக்கு, உடனடியாக தீர்வு பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கண்ட வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்காக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நீதிமன்ற வளாகத்தில், கடந்த, 11ம் தேதி முதல் சிறப்பு அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்களது வழக்குகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.