/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிற் பயிற்சியை இலவசமாக கற்றுக் கொள்ள அழைப்பு
/
தொழிற் பயிற்சியை இலவசமாக கற்றுக் கொள்ள அழைப்பு
ADDED : ஜூன் 12, 2024 10:24 PM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
இம்மையம் கோவை கேலக்ஸி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து சுய தொழில் பயிற்சிகள் அளித்து வருகிறது.
தையல் பயிற்சி, 4 மாதம், ஆரி எம்பிராய்டரி, 3 மாதம், ஒயரிங் மற்றும் பிளம்பிங், 4 மாதம், வீட்டு மின்சாதனங்கள் பழுதுபார்த்தல், 4 மாதம், கைவினை பொருட்கள் தயாரித்தல், ஒரு வாரம் ஆகிய பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
வெளியூர் பயிற்சியாளர்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சிகள் சிறந்த வல்லுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது.
செய்முறை பயிற்சிக்கு, அதிக நேரம் ஒதுக்கப்படும். பயிற்சியாளர்கள், நேரடியாக பணியில் ஈடுபட செய்து பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது, வாழ்க்கை கல்வி பயிற்சி அளிக்கப்படும்.
முழுமையாக பயிற்சி நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதுடன், சுயதொழில் செய்ய விரும்புவர்களுக்கு வங்கி கடன் பெற, ஆலோசனை வழங்கப்படும்.
சுயமாக தொழில் செய்து முன்னேற விரும்புபவர்கள், சுய உதவி குழுவினர்கள், படிப்பை தொடர இயலாத இடைநிறுத்தம் செய்தவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.
பயிற்சியில் சேர, ஆதார் அட்டை நகல், படிப்பு சான்றிதழ் மற்றும், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் இம்மாதம், 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர், தேசிய மனித மேம்பாட்டு மையம், குப்பிச்சிபாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம், கோவை, மொபைல், 81223 22381 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இத்தகவலை இம்மையத்தின் இயக்குனர் சகாதேவன் தெரிவித்தார்.