ADDED : மே 01, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர் : கார், பைக் மீது மோதிய விபத்தில், தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சசிகுமார், 40. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை மோட்டார் பைக்கில் பொன்னே கவுண்டன்புதூரிலிருந்து அன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார், பைக் மீது மோதியதில் சசிகுமார் படுகாயம் அடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் காரை ஓட்டி வந்த ஹரி கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

