/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரம் விழுந்து கார் சேதம் ஒருவர் உயிர் தப்பினார்
/
மரம் விழுந்து கார் சேதம் ஒருவர் உயிர் தப்பினார்
UPDATED : பிப் 27, 2025 07:16 AM
ADDED : பிப் 27, 2025 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுார் தேவர்சோலை அருகே, மரம் விழுந்து கார் சேதமடைந்த சம்பவத்தில் ஒருவர் உயிர் தப்பினார்.
கேரள மாநிலம் கண்ணுார் வளபட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜெம்சித்,46. இவர், நேற்று காலை கூடலுாரில் இருந்து கேரள மாநிலம் சுல்தான் பத்தேரிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
தேவர்சோலை சர்க்கார் மூலா அருகே, கார் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் இருந்த மரம் திடீரென காரின் மீது விழுந்து. அதில், காரின் பின்பகுதி சேதமடைந்தது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தேவர்சோலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.