/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் போலீசார் தடியடி சம்பவம் பா.ஜ., அ.தி.மு.க., மீது வழக்கு பதிவு பா.ஜ., - அ.தி.மு.க., மீது வழக்கு பதிவு

ADDED : மார் 26, 2024 10:21 PM
ஊட்டி;ஊட்டியில் நடந்த தடியடி சம்பவத்தில், பா.ஜ.,-- -அ.தி.மு.க., மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நேற்று முன்தினம், லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் முருகன் மற்றும் அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு முன், பா.ஜ.,வினர் காபி ஹவுஸ் சந்திப்பிலிருந்து ஊர்வலமாக வந்தனர். பின் தொடர்ந்து, அ.தி.மு.க., வினரும் ஊர்வலமாக வந்தனர். ஸ்பென்சர்ஸ் சாலையில் இரு கட்சியினரின் கூட்டம் அதிகரித்தது.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த நீலகிரி எஸ்.பி., சுந்தரவடிவேல் தலைமையில் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர். தடியடி சம்பவத்தில் இரு கட்சியின் தொண்டர்கள் காயமடைந்து, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக, ஊட்டி பி 1 போலீசார், 'தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலை மறியலில் ஈடுபட்டது, பட்டாசு வெடித்தது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது,' உள்ளிட்ட, 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதில், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., கட்சிகளின் மீது ஒரு வழக்கு; அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் அ.தி.மு.க, முக்கிய நிர்வாகிகள் மீது நான்கு வழக்கு; பா.ஜ., மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.